நெஞ்சம் மறப்பதில்லை-1
ஆயிரம் கனவுகள் சூழ்ந்த பதின்பிராயம் அது! ஒரு புதிய பள்ளிக்குள் அன்று நுழைந்தேன்... கே.எஸ் தியேட்டருக்கு மிகவும் அன்மையில் அமைந்திருந்த பள்ளி அது அதனால் தியேட்டரில் ஓடும் படையப்பா படத்தின் அத்தனைப் வசனங்களையும், பாடல்களையும் உள்வாங்கிக் கொண்டே பாடங்களை கவனித்திருப்போம்!
அங்கு நான் படித்தது ஓராண்டு காலம் தான்! ஓடுகள் வேயப்பட்ட நீளமான வகுப்பறைகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மட்டும் தான் அதன் சொத்து! அங்கே எங்களின் நட்பு வட்டம் மிகவும் சிறியது நான், தண்டபானி, நந்தகணேஷ், ப்ரீத்தி, லலிதா (லலிதாம்பிகை) மற்றும் மதுபாலா. நாங்கள் ஆறு பேரும் ஒரு கேங்கு...
அதில் லலிதாவின் மேல் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு! இப்பொழுதும் கூட அவளின் பெயர் சொல்லும் போது இதழோரம் அரும்பும் புன்னகையை மறைக்க முடிவதில்லை! தினமும் பள்ளி முடிகையில் பள்ளிக்கு வெளியே பதார்த்தங்கள் விற்கும் ஆயாவிடம் மரவள்ளி, நிலக்கடலை என தீனிகளை வாங்கிக் கொரித்தவாறு நானும் லல்லியும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பேசிக் கொண்டே போவோம்!
அவ்வளவு நட்பு, அவ்வளவு அன்பு, அவ்வளவு காதல் என மார்கழிப் பூவின் மேல் ஊடுருவிய பனியைப் போல மனதினுட் புகுந்தவள் அவள்...என் வீடு ஒரு திசையில் இருந்தாலும் அவளோடு பேசுவதற்கு என்றே உடன் சென்று வீடு வரை விட்டு வந்த நாட்கள் எத்தனையோ!
இது போறாது என்று மாலை வேளைகளில் அவளின் வீட்டிற்குச் சென்று முகம் பார்த்து வந்திருக்கிறேன்...கொஞ்ச நாட்களில் நானும் பள்ளி மாறிவிட ஆனால் அந்த காதல் மட்டும் மனதிலிருந்து மறையவில்லை...ஒரு நாள் மதுபாலாவை என்னுடைய பள்ளியிலேயே பார்க்க நேர்ந்தது...லலிதாவின் நெருங்கிய தோழி அவள்...அவளிடம் விசாரித்த போது "அவ இங்க இல்ல அப்பாவோட தொழில்ல நட்டமாகிருச்சு அதனால சொந்த ஊருக்கு போய்ட்டாங்க, என்கிட்ட கான்டேக்டும் இல்ல டா" என சொல்லிப் போனாள்...
அடுத்த வருடம் அதே பள்ளியில் அவளும் வந்து சேர்ந்தாள்! ஓரிரு முறை என் முகம் பார்த்துப் புன்னகை உதிர்த்துபோனாள். நண்பன் ஒருவனின் உதவியுடன் அவளின் வீட்டையும் கண்டுபிடித்தாயிற்று...ஆனால் என்ன அந்த வீதியில் சைக்கிள் டயர் தேய போய் வந்தது தான் மிச்சம்!
இப்படி நாட்கள் உருண்டோட தேர்வுகளும் முடிந்தது, பள்ளிப் ப்ராயமும் முடிந்தது...ஆனால், அந்த சொல்லாத முதல் காதலின் சுவடுகள் மட்டும் மனதினுள் தங்கி விட்டது மணலினுள் நுழைந்த மழை நீரின் ஈரம் போல!

.jpg)
No comments:
Post a Comment