நாம ஊருக்கு போறதென்னவோ 3 மாசத்துக்கு ஒரு தரம் தான் அதனால பயண அனுபவங்களை குட்டிக் கதையா எழுதிடலாம் னு முடிவு பண்ணிட்டேன்...கதை புடிக்கல னா என்னைய ஆரும் கைத, கசுமாலம் திட்டப்பிடாது! ஆமா சொல்லிப்புட்டேன் :P
இனி கதைக்கு வருவோம்...
நாங்க இருக்குறது வேளச்சேரி ஏரியா னு தான் பேரு ஆனா விஜய நகர் பஸ் ஸ்டாண்டுல இருந்து பத்தாயிரம் மைல் பயணம் பண்ணினா தான் எங்க ரூமை அடைய முடியும்!!! எங்க போனாலும் நடராஜா சர்வீஸ் தான் எனக்கு...ஆபிஸ்ல இருந்து விஜய நகர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இறங்கினதும் பிரவீனுக்கு போன் அடிச்சேன்...வழக்கம் போல போன எடுத்து கினத்துக்குள்ள இருந்து பேசுற தொனியில அவனோட ஓட்ட போன்ல இருந்து கத்தினான் :P அவனும் சொன்னான் மச்சி நான் அடையார் பேக்கரி பக்கத்துல நிக்குறேன் வந்துடு னு...சரி னு கிளம்பி ரூம் போய் குளிச்சுட்டு சாப்டுட்டு கிளம்பி பஸ் நிலையத்துக்கு வந்தா திருவாரூர் தேர் திருவிழா மாதிரி கூட்டம்!!! அப்படியே பிரவீன் என்னைய பாத்து ஒரு மொறை மொறச்சான்...ஏன்னா அவன் வழக்கமா ட்ரைன் ல போற பேர்வழி...சரி ஏசி பஸ்ல போலாம் னு சொல்லி ஆசுவாசப் படுத்தினேன்....
நின்னு பாத்தோம் பஸ் வர்ர மாதிரி தெரியல...அப்படியே பஸ் ஸ்டாண்டுலயே எதையோ பறிகுடுத்த மாதிரி நடத்துட்டு இருந்தோம்...ஷெட்டுக்கு வெளிய சேர் ஆட்டோ காரன் கூவிக்கிட்டு இருந்தான்!!! மச்சி ஆட்டோ இருக்கு போலாமா னு கேட்டேன்...அவனும் என்னோட பகீரதப் ப்ரயர்த்தனம் பண்ண தயாரானான்...
ஆட்டோவுக்கு உள்ள கானா பாலா தன்னோட கர கர குரல்ல 'டோன்ட் வொரி டோன்ட் வொரி பீ ஹாப்பி 'னு கத்திக்கிட்டு இருந்தார்...
இப்படியாக நாங்கள் இருவரும் ஆட்டோவில் ஏறி உக்கார்ந்தோம்...கொஞ்ச நேரத்தில் ஆட்டோ நிரம்ப ஆட்டோ ஓட்டிய பையன் இரண்டு பேரை தடாலடியாக கூட்டி வந்து பின்னால் லக்கேஜ் வைக்கும் இடத்தில் சுருக்கி அமர வைத்து அவர்கள் நகர முடியாதவாறு பின் கதவை 'டமார்' என மூடிவிட்டு சொன்னான் 'கொஞ்சம் அச்சஸ் பண்ணிக்குங்கணே 20 மினிட்ஸ் ல கோயம்பேடு கொண்டு போய் இறக்கி விடுறேன்' என சொல்லி இருக்கையில் உக்கார்ந்தான்...
சர சரவென வண்டி நகர்ந்தது...கூடவே சென்னைக்கே உரித்தான குத்துப் பாடல்களும், கானாப் பாடல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன காதைக் கிழிக்கும் இரைச்சலுடன்!! குறுகி உக்கார்ந்து இருப்பது ஒரு பக்கம் ,ஆட்டோ பையனின் கானா பற்று ஒரு பக்கம் என பின்னால் உக்கார்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேந்தப் பேந்த முளித்துக் கொண்டே வந்தனர்...
தட தட வென ஓடிய வண்டி உதயம் தியேட்டர் சிக்னலில் 5 நிமிடம் நின்றது...பின்னால் இருந்தவர் பொறுமை இழந்து திட்ட ஆரம்பித்தார் ஆட்டோகாரங்களுக்கு திமிரு ஆதிமாகிருச்சு எடுயா வண்டிய என்று பின்பு வண்டி மெதுவாக அசோக் நகர், கே கே நகர் வழியாக ஒரு வழியாய் வடபழநி சிக்கனலை எட்டியது...
அதற்குள் கேட்ட நான்கு பாட்டையே ஒரு நாலு தரமாவது திரும்ப கேட்டிருப்போம்!! பிரவீன் எனக்கு எதிரில் விழி பிதுங்கியவாறு உக்கார்த்து இருந்தான்... அவன் கண்ணில் கொலைவெறி மின்னியது...ஒரு வழியாக கோயம்பேடு வந்தடைந்தோம்...
கோயம்பேடு வந்து இறங்கியதும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே போகப் போக கூட்டம் கும்மியடித்தது!!! பிரவீன் வழக்கம் போல என்னை கரித்துக் கொட்டிக் கொண்டே வந்தான்...உள்ளே போனதும் பேவில் இல்லாது ஓரமாக நின்று இருந்த சேலம் போகும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்...
சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்து பேயில் போய் நின்றது...சிறிது நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிரவீனுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார் நாங்கள் அமர்ந்தது 3பேர் அமரும் இருக்கை அதில் முறையே ஜன்னலொர சீட்டில் நானும் என்னருகில் என் டளபதியும் அடுத்து மூன்றாம் நபரும் இருந்தோம்...
சிறிது நேரத்தில் பேருந்து நகர ஆரம்பித்து அரை மணி நேரத்தில் மெயின் ரோட்டை எட்டியது...எங்களுக்கு ஓரே சந்தோசம் ஏனெனில் வழக்கமாக பேருந்து மெயின் ரோடிற்கு வரவே ஒன்றரை மணி நேரம் பிடிக்கும்!!! மெதுவாக பக்கத்தில் அமர்ந்து இருந்த மூன்றாம் நபர் பிரவீனிடம் பேச்சு கொடுதார்...
பேருந்து தாம்பரத்தை நோக்கிய வழித்தடத்தில் ஓடத் துவங்கியது...நானும் நரம்பனும் (பிரவீன்) இது அவனோட செல்லப் பேரு...பிசினஸ் பத்தின விசயங்களைப் பேசிக் கொண்டு இருந்தோம்...அதுமுடிய அடுத்தது கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல் மற்றும் அதனால் ஊழியர்கள் அடையும் பாதிப்புகளை பற்றியும் விவாதம் திரும்பியது...அப்போது தான் அருகில் இருந்த மூன்றாம் ஆசாமி உள்ளே நுழைந்தார்....
அப்படியே அந்த விவாதம் அரசியல், பெரியாரியம்,.சித்தர் பாடல்கள், தத்துவம், உலக அரசியல் என நானும் அந்த மூன்றாம் நபரும் பேசிக்கொண்டு இருந்தோம் எங்கள் வாயையே பாத்த மாதிரி நரம்பன் நடுவில் மூர்ச்சையற்று உக்கார்ந்து இருந்தான்! :P
இறுதியாக மோடியைப் பற்றி பேச்சை எடுக்கும் போது தான் பயபுள்ள வாயத் தொறந்துச்சு...
அதேபோல அந்த நபர் சொன்னார் என்ன இருந்தாலும் ராஜிவ் காந்தியை புலிகள் கொண்று இருக்கக் கூடாது என்றார்...நான் திரும்ப கேட்டேன் 'இலங்கைக்கு ராஜிவ் அரசு எதற்காக ரானுவ ஒத்துழைப்பு கொடுத்தது? அப்படியே அவர்கள் ராஜிவை கொன்றதால் ஏன் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலையை 140000 பேரை ஏன் மத்திய மன்மோகன் அரசு கண்டுகொள்ளவில்லை?'
இதற்கு அவர் நீங்கள் கூறியது சரிதான் என ஆமோதித்தார்...
இந்த விசயங்களைப் பேசிக் கொண்டு இருக்கும் போது ஏன்றோ ஒருநாள் ஊருக்கு பயணித்துக் கொண்டிருக்கும் போது என் அருகில் பயணித்த இலங்கையிலிருந்து வந்து அகதியாக வாழ்ந்த ஒரு நண்பரின் சோகமும், கண்ணீரும் என்னைத் தொற்றிக் கொண்டது...
ஒரு வழியாக வண்டி வழக்கம் போல விக்கிரவாண்டி டீக்கடையில் நின்றது...இங்கு ஒரு டிபன் சாப்பிட சொத்தை வித்துட்டுதான் போகனும்!!! :P நாங்கள் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதற்குள் அந்த மூன்றாம் நபர் எங்களைத் தேடிக் கண்டுபிடித்து 'டீ சாப்டறீங்களா, காபி சாப்டறீங்களா என கட்டாயப் படுத்தி என் கையில் ஒரு காப்பியைத் தினித்தார்...சரி என்று காப்பியைக் குடித்து விட்டு பஸில் ஏறி உக்கார்ந்தோம்...எல்லாரும் பேசிப் பேசி செம டயர்டு...
அதோடு நாங்கள் பேசுவதைப் பொருக்காமல் கோ பாசஞ்சர்கள் கொலை வெறியுடன் மொறைக்க ஆரம்பித்ததால் பேச்சை அப்படியே மூட்டைக் கட்டி வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தோம்...காலையில பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது கூட வந்த அந்த நபர் அவர் பெயர் தேவ் ஆனந்த் அவரை ஈரோடு பஸில் ஏற்றிவிட்டு நாங்கள் நகர்ந்தோம்...
ஒவ்வொரு பயணமும் நமக்கு புதிதாக முகம் தெரியாத புதிய நட்புகளை கன நேரத்தில் கோர்த்து விட்டுவிடுகிறது !! எத்தனையோ காதலையும், கவலையை, நம்பிக்கையை, புதிய பாதையை, புதிய விடியலை, இப்படி எத்தனையோ விடயங்களை நடத்த வல்லது!!! ஒவ்வொரு பயணமும் வித்யாசமான மறக்க முடியாத அனுபவங்களை மனதில் அமைதியாக எழுதிவிட்டு சென்று விடுகிறது இல்லையா??? :)
இவ்வளோ நேரம் இந்த கதையை பொறுமை காத்துப் படித்த அனைவருக்கும் நன்றி!!! :)

No comments:
Post a Comment