#வாசிப்பு2020
7/2020
ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
முதல் உலகப் போர் முடிந்த கால கட்டத்தில் குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் என்னும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கடலோர கிரமத்தில் வசிக்கும் மக்களையும், அந்த கிராமத்தின் தலைவனாக தன்னை பாவித்திருக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளி என்கிற கதாபத்திரத்தின் ஊடாக தலைக்கணம் என்னென்ன இழிவான நிலைக்கு ஒருவனை கொண்டு செல்லும் என்பதை நாவல் காட்டுகிறது...
இஸ்லாமிய பழமைவாதத்தையும், அதில் இருக்கும் மூட நம்பிக்கைகளையும், முதலாளியின் அடக்குமுறையையும் எதிர்த்து குரல் கொடுக்கும் சுறாப்பீலி விற்கும் மஹமூது ஒரு ஹீரோவாகவே கட்சியளிக்கிறார்...
அந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் பெண்களின் எண்ணங்களுக்கு மதிப்பே கொடுப்பதில்லை என்பதையும் முதலாளியின் மகள் ஆயிஷா, அவரின் தங்கை நூகுபாத்துமா ஆகிய கதாப்பாத்திரங்களின் மூலமாக உணர்த்துகிறார்...
ஊரில் ஆங்கிலப் பள்ளிக் கூடம் வருவதை எதிர்க்கும் மக்கள்...மதரஸா என்னும் குர்ஆன் சொல்லித்தரும் பள்ளிக் கூடத்தை தவிர மற்றதை ஹராம் என்று ஒதுக்கும் மக்கள் என இஸ்லாமிய மக்களின் ஊடாக இருந்த பிற்போக்குத் தனங்களை எல்லாம் உள்ளபடியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் மீரான்...
நாவலை ஆரம்பிக்கும் போது வழக்குச் சொற்களை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும் மொழிநடையில் நம்மை இயல்பாக நாவலின் ஊடக பயணித்து ஒன்றி வாசிக்க வைத்து விடுகிறது!
பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 215
விலை - ₹225
No comments:
Post a Comment