#வாசிப்பு2020
10/2020
ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி
18 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, பழ. அதியமான் தொகுத்திருக்கிறார். கரிசல் நிலத்தின் கதை சொல்லியான அழகிரிசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் அவர்கள் பிறந்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர்.
கரிசல் நிலத்திலிருந்து எழுத வந்திருந்தாலும் ஒருசில கதைகளைத் தவிர மற்றவை எல்லாம் சென்னையின் மைலாப்பூர், திருவல்லிக்கேணி என சென்னையின் அறுபதுகளின் வாழ்நிலை கதைகளில் பிரதிபலிக்கிறது...
கதாபாத்திரங்கள் எல்லோரும் ஏழை மற்றும் நடுத்தர குடுத்து ஆட்களாகவே இருக்கிறார்கள். அநேக கதைகளில் பசி என்பதை மையச் சரடாக பயன்படுத்தியிருக்கிறார் அழகிரிசாமி.
குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், குழந்தைகளின் உலகம், மனிதனின் சிறுமை எண்ணங்கள் என பல்வேறு தளங்களில் எளிமையான நடையில் சித்தரிப்பின் லாவகத்தோடும், உள்ளோடும் துயர இழையுடனும், நகைச்சுவையோடும், வாசகனுக்கு சலிப்பில்லாமலும் ஒரு Feel good தொகுப்பாக இருக்கிறது ராஜா வந்திருக்கிறார்!
பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 270
விலை - ₹300
No comments:
Post a Comment